/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாண்டுகன்னீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
/
மாண்டுகன்னீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
மாண்டுகன்னீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
மாண்டுகன்னீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 05, 2024 01:58 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவிற்கும், ஒ.பி.குளம் தெருவிற்கும் இடையே உள்ள தெருவில், மாண்டுகன்னீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில். 60 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது.
மாண்டுகன்னீஸ்வரர் கோவில் வரலாற்றில் கூறியிருப்பதாவது:
கி.பி. 7ம் நுாற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மாண்டுகன்னீஸ்வரரை தரிசிக்க வந்தபோது, சிவபெருமான் முகம் சரியாக தெரியவில்லை என, வருத்தப்பட்டனர்.
இருவரையும் உற்றுநோக்கிய சிவபெருமான், ஏ! நந்தி தேவனே, முகத்தை கொஞ்சம் சற்று ஒதுக்கலாகாதோ! என்று கட்டளையிட்டார். அவர் இட்ட கட்டளைக்கு அடிபணிந்து நந்திதேவர் தன்னுடைய முகத்தை வடக்கு முகமாக திருப்பிக் கொண்டார் என, கூறப்பட்டுள்ளது. அதன்படி, இக்கோவிலில் மூலவர் சன்னிதி உள்ள நந்தி தேவர், வடக்கு திசை பார்த்தபடி உள்ளார்.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் முறையான பராமரிப்பு இல்லாததால், நந்திமண்டபம், மூலவர் விமானம், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாண்டுகன்னீஸ்வரர் கோவிலில் மூலவர் விமானம், மதில்சுவர், தரைதளம், பிற சன்னிதி திருப்பணி துவக்குவதற்காக 33.50 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு திருப்பணி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.