/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்
/
தபால் அலுவலகம் முன் தி.மு.க.,வினர் போராட்டம்
ADDED : பிப் 25, 2025 07:37 PM
காஞ்சிபுரம்:ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், பிப்ரவரி 25 போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தி.மு.க., மாணவர் அணியினர் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மத்திய அரசு அலுவலகங்கள் முன் முழக்கங்களை எழுப்பினர்.
காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் பேரணியாக சென்ற தி.மு.க.,வினர், அங்குள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

