/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் திருமுறை முற்றோதல்
/
ஏகாம்பரநாதர் கோவிலில் திருமுறை முற்றோதல்
ADDED : மே 07, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி உடனுறை ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் திருவாசகம் முற்றோதல் பேரவை சார்பில், மாத சிவராத்திரி, சுவாதி, திருவாதிரை, தமிழ் மாத பிறப்பு உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிவாலயங்களில் திருமுறை முற்றோதல் செய்து வருகின்றனர்.
அதன்படி, மாத சிவராத்திரியையொட்டி, திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்தது. இதில், மன்ற பொறுப்பாளர் லோகநாயகி தலைமையில், சிவபக்தர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் அருளிச்செய்த 7ம் திருமுறையின் 100 பதிகங்களின் 1,028 பாடல்களை முற்றோதல் செய்தனர்.

