/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிப்காட் நடைமேடையில் சிதறிக் கிடக்கும் மின் ஒயர்
/
சிப்காட் நடைமேடையில் சிதறிக் கிடக்கும் மின் ஒயர்
ADDED : மார் 04, 2025 01:52 AM

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் சிப்காட் தொழில்பூங்காவின் ஒரு பகுதியான வைப்பூர், எறையூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், வைப்பூர் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும் சிப்காட் சாலை வழியே, ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலைகளுக்குதினமும் சென்றுவருகின்றனர்.
அதே போல, வைப்பூர்,எறையூர் பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பகுதிவாசிகள் நாள்தோறும் இந்த சாலை வழியே நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் சாலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள மின் ஒயர், அங்காங்கே துண்டாகி நடைபாதையில் விழுந்துள்ளது.
இதனால், இவ்வழியாக நடந்து செல்லும் ஊழியர்கள், மாணவ - மாணவியர் உட்பட அனைவரும், மின் விபத்து ஏற்படும் அச்சத்துடன் செல்கின்றனர்.
எதிர்பாராத விதமாக மின் ஒயரை மிதித்தால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின் இணைப்பை சரி செய்ய, ஒரகடம் சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.