/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த வலியுறுத்தல்
/
பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 12:51 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சீயமங்கலம் கிராமம். இக்கிராம காலனி பகுதியில், 150 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
சீயமங்கலம் காலனிக்கான ரேஷன் கடை திம்மராஜம்பேட்டையில் உள்ளது. இப்பகுதியினர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற 1 கி.மீ., துாரத்தில் உள்ள திம்மராஜம்பேட்டை பகுதி ரேஷன் கடைக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
இதனால், வெயில் மற்றும் மழை நேரங்களில் ரேஷன் கடைக்கு செல்லும் முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர்.
எனவே, சீயமங்கலம் காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.

