ADDED : பிப் 25, 2025 02:17 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கத்தில் இருந்து, கிதிரிப்பேட்டை வழியாக நெய்க்குப்பம் செல்லும் சாலை உள்ளது.
நெய்க்குப்பம், புத்தாகரம், கிதிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத் - காஞ்சிபுரம் பிரதான சாலைக்கு சென்று, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலையில், நெய்க்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவு உள்ளது.
இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால், சாலை வளைவு பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால், இரவு மற்றும் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை உள்ளது.
எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.