/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுந்தர வரதர் கோவிலில் கொடியேற்றம்
/
சுந்தர வரதர் கோவிலில் கொடியேற்றம்
ADDED : ஏப் 17, 2024 10:34 PM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி நேற்று, காலை 4:30 மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு பல்வேறு பூஜை செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய சுந்தர வரதராஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபஆராதனை எடுத்து வழிபட்டனர்.
மூன்றாம் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான வரும் 23ல், காலை தேரோட்டமும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

