/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்துார் கோவிலில் வரும் 14ல் கொடியேற்றம்
/
குன்றத்துார் கோவிலில் வரும் 14ல் கொடியேற்றம்
ADDED : ஏப் 10, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் கட்டப்பட்ட நாகேச்சர சுவாமி கோவில் குன்றத்துாரில் உள்ளது.
நவகிரகங்களில் ராகுதலமாக இக்கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா ஏப்., 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, 20ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

