/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மண் அரிப்பால் பூங்கா சாலையில் பள்ளம்
/
காஞ்சியில் மண் அரிப்பால் பூங்கா சாலையில் பள்ளம்
ADDED : ஆக 22, 2024 11:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு, மடம் தெரு பகுதியில் இருந்து தாயார் குளம், கலெக்ட்ரேட், திருப்பருத்திகுன்றம், காவலான்கேட் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், பிள்ளையார்பாளையம் அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா அமைந்துள்ள சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில் பூங்கா அருகில், சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் உள்ள இடத்தில், திடீரென வேகத்தை குறைக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதியும், பள்ளத்தில் இறங்கும்போது, நிலைதடுமாறி விழுந்தும் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, அண்ணா பூங்கா அமைந்துள்ள சாலையில் உள்ள பள்ளதை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.