/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கு அடையாள அட்டை
/
ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கு அடையாள அட்டை
ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கு அடையாள அட்டை
ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கு அடையாள அட்டை
ADDED : மே 02, 2024 10:21 PM
செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் மற்றும் பதிவு பெற்ற 11 அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் 17 பேர் என, 31 பேர் போட்டியிட்டனர். கடந்த ஏப்., 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு, அடையாள அட்டைகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்குகிறார்.
இதற்காக, ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், 85 முகவர்கள் என, 2,635 முகவர்களுக்கு அடையாள வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.