/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏழைகளின் நிலம் வழங்காமல் விட்டால் அரசு திட்டங்கள் வீண்: சிவகாமி பேச்சு
/
ஏழைகளின் நிலம் வழங்காமல் விட்டால் அரசு திட்டங்கள் வீண்: சிவகாமி பேச்சு
ஏழைகளின் நிலம் வழங்காமல் விட்டால் அரசு திட்டங்கள் வீண்: சிவகாமி பேச்சு
ஏழைகளின் நிலம் வழங்காமல் விட்டால் அரசு திட்டங்கள் வீண்: சிவகாமி பேச்சு
ADDED : செப் 11, 2024 12:17 AM

காஞ்சிபுரம்:ஏழைகளின் நிலங்கள், அவர்களுக்கு வழங்காமல் விட்டால், அரசின் அனைத்து திட்டங்களும் வீணாக தான் போகும் என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பஞ்சமி நில மீட்பு பயணத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், சமூக சமத்துவ படை சார்பில், பஞ்சமி நிலம் மீட்பு பயணம் நேற்று நடந்தது. சமூக சமத்துவ படை தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி பேசியதாவது:
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 12 லட்சம் ஏக்கர் நிலங்களை பிரிட்டிஷ்காரர்கள் தானமாக வழங்கினர். இதில், 3 லட்சம் ஏக்கர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உள்ளது. மீதி இருக்கும், 9 லட்சம் ஏக்கர் நிலம் ஆதிக்க ஜாதியினரிடம் உள்ளது.
இதை மீட்க வேண்டும் என, போராட்டம் நடத்தினோம். இதன் பலனாக, 2011ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அவர் இறந்த பின், புதிய நீதிபதி போடவில்லை. நம்மில் சிலர் கோர்ட்டிற்கு சென்று உத்தரவு வாங்கியதின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் ஆணையம் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., அரசு எவ்வளவு நல்லது செய்தாலும், ஏழைகளின் நிலங்கள் அவர்களுக்கு வழங்காமல் இருப்பது, வீணாக தான் போகும்.
ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என, கூறிவிட்டு அவர்கள் பயன்படுத்திய நிலங்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்தார்கள்.
ஆகையால், நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்த வேண்டும். ஒரு குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம். மகளிர் குழுவினருக்கு, நீண்ட கால குத்தகை அடிப்படையில் அந்தந்த ஊரில் நிலங்களை வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.