/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கந்தழீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் பணி துவக்கம்
/
கந்தழீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் பணி துவக்கம்
ADDED : மே 04, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கந்தழீஸ்வர் கோவில் உள்ளது.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் சதுரவடிவ ஆவுடையாரில், பிரமாண்டமாக லிங்கதிருமேனியாக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோவிலில், ஹிந்து அறநிலைய துறை சார்பில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
பழைய கற்கள் மற்றும் புதிய கற்களை கோவில் அருகே செதுக்கி, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகளில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.