/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பையால் துார்ந்த வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
குப்பையால் துார்ந்த வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
குப்பையால் துார்ந்த வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
குப்பையால் துார்ந்த வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 24, 2024 12:29 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், ஸ்ரீரங்க கிருஷ்ணா நகர், தேனம்பாக்கம் சாலையில், மழைநீர் செல்லும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் கவர் உள்ளிட்ட குப்பை குவியலால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை காலத்தில் வடிகால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதி குடியிருப்புகளிலும், சாலையிலும் தேங்கும் நிலை உள்ளது.
எனவே, சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம் சாலையில், துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது..