/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.பி.எல்., டிக்கெட் நாளை விற்பனை
/
ஐ.பி.எல்., டிக்கெட் நாளை விற்பனை
ADDED : மே 07, 2024 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், வரும் 12ம் தேதி, மாலை 3:30 மணிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., போட்டி நடக்க உள்ளது.
இதைக்காண விரும்பும் ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:40 மணி முதல் பேடிஎம், www.insider.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம். டிக்கெட்டுகள், 1,700, 2,500, 3,500, 4,000 மற்றும் 6,000 ரூபாய் என, நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்தில் இடம் பெறும் வினாடி - வினா நிகழ்ச்சியில் வெற்றிபெற்று, இலவசமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம்.

