/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
/
பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2025 02:18 AM

பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலர், பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.
பிள்ளைப்பாக்கம் ஊராட்சி தலைவர் காயத்ரி வெங்கடேசன் வரவேற்றார். இந்த விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலர் போந்துார் எஸ்.செந்தில்ராஜன் பங்கேற்று கழக கொடியேற்றி, ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் துாவி, இனிப்புகள் வழங்கினார். இதை தொடர்ந்து, 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீபெரும்புதுார் கிழக்கு ஒன்றிய செயலர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் திருமால், இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார், பிள்ளைப்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆர்.மோகன், சி.வெங்கடேசன், எம்.சந்திரன், எம்.லட்சுமணன், ஏ.மணி, ஆர்.சந்திரன், என்.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

