/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய சிலம்ப போட்டி காஞ்சி வீரர்களுக்கு 84 பதக்கம்
/
தேசிய சிலம்ப போட்டி காஞ்சி வீரர்களுக்கு 84 பதக்கம்
தேசிய சிலம்ப போட்டி காஞ்சி வீரர்களுக்கு 84 பதக்கம்
தேசிய சிலம்ப போட்டி காஞ்சி வீரர்களுக்கு 84 பதக்கம்
ADDED : மார் 06, 2025 12:30 AM

காஞ்சிபுரம்,:இந்திய சிலம்ப கழகம் சார்பில், 6வது தேசிய சிலம்ப போட்டி, கடந்த 2ம் தேதி, கோவையில் நடந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில், காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமி தலைமை பயிற்சியாளர் பாபு தலைமையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 47 வீரர்கள் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், 20 தங்கம், 36 வெள்ளி, 28 வெண்கலம் என, மொத்தம், 84 பதக்கங்களை வென்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையரை காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.