/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமான மின்கம்பம் மாற்ற எதிர்பார்ப்பு
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமான மின்கம்பம் மாற்ற எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமான மின்கம்பம் மாற்ற எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமான மின்கம்பம் மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2024 01:07 AM

சேதமான மின்கம்பம் மாற்ற எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து, விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.மதனகோபால்,
காஞ்சிபுரம்.
விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிப்பு
வாலாஜாபாத் கோபால் தெருவில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது. அதே கட்டட வளாகத்தில், பழமை வாய்ந்த சாவடி கட்டடம் உள்ளது.
இந்த கட்டடத்தின் மீது செடி, கொடிகள் சூழ்ந்திருப்பதால், அதிக விஷமுள்ள பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த கட்டடத்தை ஒட்டி இருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மு.ஜெயராமன்,
வாலாஜாபாத்.
ஏரியில் குவியும் பிளாஸ்டிக் குப்பை
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பிளாஸ்டிக், இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கெட்டி செல்கின்றனர்.
இதனால், ஏரியின் நீர் மாசடைந்து வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையோரம் வேலி அமைத்து, ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.கண்ணதாசன், வஞ்சுவாஞ்சேரி.
இடையூறு பாறைகள் அகற்ற கோரிக்கை
வாலாஜாபாத் நடேசய்யர் தெருவில், ஸ்டேட் பேங்க், சிட்டி யூனியன் பாங்க், தனியார் மழலைப் பள்ளி, திருமண மண்டபம் என, பல்வேறு தரப்பினர் கூடும் இடமாக உள்ளது.
இந்த சாலையோரத்தில், வீடு கட்டுவதற்கு தோண்டிய போது, வெளியே எடுக்கப்பட்ட பெரிய பாறாங்கற்கள் சாலையோரம் போடப்பட்டு உள்ளன. அந்த தெரு வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை ஓரத்தில் இருக்கும் பாறாங்கற்கள் இடையூறாக உள்ளன.
இதனால், நடேசய்யர் தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பாறாங்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.ஜெயராமன், வாலாஜாபாத்.