/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குப்பையை கிளறும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

ADDED : செப் 12, 2024 01:54 AM

குப்பையை கிளறும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
ஓரிக்கை விவேகானந்தர் நகரில், 20க்கும் மேற்பட்ட பன்றிகள் தஞ்சமடைந்துள்ளன. கூட்டமாக வரும் பன்றிகள் வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டங்களில் உள்ள காய்கறி, பழ வகை செடி, கொடிகளை கடித்து குதறி, வேருடன் பிடுங்கி நாசப்படுத்தி விடுகின்றன. இதனால், வீட்டில் தோட்டம் அமைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், குப்பையை கிளறும் பன்றிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. குப்பையை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை, உள்ளது.
மேலும், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பன்றிகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, ஓரிக்கை விவேகானந்தர் நகரினருக்கு தொல்லை கொடுக்கும் பன்றிகளை பிடிக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- எஸ்.சுரேஷ்குமார்,
காஞ்சிபுரம்.