/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாமல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
/
தாமல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 17, 2024 09:38 PM
தாமல்:காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் கிராமத்தில், திருமாலழகி நாயிகா சமேத தாமோதர பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி நாளை, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது.
வரும் 21ம் தேதி, காலை 5:00 மணிக்கு விஸ்வரூபமும், தொடர்ந்து புண்யாகவாசனம், உக்தஹோமம், கும்ப ஆராதனம், மஹாபூர்ணாஹூதி, யாத்ரா தானமும், கும்ப புறப்பாடும் நடைபெறுகிறது.
காலை 10:30 மணிக்கு கோவில் விமான கோபுர கலசத்திற்கும், பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 11:30 மணிக்கு திருவாரா தனம், பிரம்மகோஷம், வேதப்ரபந்த சாற்றுமுறை, கோஷ்டி தீர்த்தமும், பிற்பகல் 12:30 மணிக்கு சர்வ தரிசனமும்.
மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 5:30 மணிக்கு பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது

