/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
பெருநகர் முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 22, 2024 11:42 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில் கிராமத்திற்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடம், பழுதடைந்து, விரிசல் மற்றும் சில இடங்களில் சிமென்ட் காரைகள் உதிர்ந்தும் சிதிலம் அடைந்தும் இருந்தது.
இக்கோவிலை புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணி, சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று, காலை 7:00 மணிக்கு, யாகசாலை பூஜையை தொடர்ந்து, கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 10:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.