/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்
/
மழைநீர் வடிகால் வசதியின்றி குண்ணம் ஊராட்சியினர்
ADDED : செப் 09, 2024 11:33 PM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் உட்புற சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லை.
இதனால், மழை காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கும் நிலை இருப்பதோடு, வீடுகளிலும் மழைநீர் புகும் சூழல் உள்ளது.
மேலும், வடிகால் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால், அப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், கழிவுநீர் சாலையில் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, குண்ணம் ஊராட்சியில் விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.