/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
/
செல்வ விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED : ஆக 28, 2024 09:00 PM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், செல்வ விநாயகர், சிவ விஷ்ணு கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சி.என்.ஏ., மற்றும் சி.எஸ்.செட்டி குறுக்கு தெருவினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கடந்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.
மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், நேற்று, காலை 9:00 மணிக்கு புண்ணியகோட்டீஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலமும், விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

