ADDED : செப் 09, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதந்தோறும் இரண்டு செவ்வாய்க்கிழமைகளில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் மனு அளிக்கின்றனர். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டமும் அமைச்சர் அன்பரசன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நாளை, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:00 மணிக்கு, அமைச்சர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.