/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு புதிய கட்டட பணி துவக்கம்
/
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு புதிய கட்டட பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு புதிய கட்டட பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு புதிய கட்டட பணி துவக்கம்
ADDED : ஆக 15, 2024 10:30 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம், 100 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திரா காந்தி சாலையில் செயல்பட்டு வந்தது. மிக பழமையான இந்த அலுவலகம், போதிய இடமின்றியும், பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படையான வசதியின்றியும் செயல்பட்டு வந்தது.
எனவே, புதிய கட்டடம் கட்டுவதற்கு, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து, புதிய மாநகராட்சி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை, அமைச்சர் நேரு, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. தற்காலிகமாக கால்நடை மருத்துவமனை அருகே மாநகராட்சி விடுதியில் மாநகராட்சி அலுவலகம் செயல்படுகிறது.
புதிய கட்டடத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணியில், கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தரைதளம் முழுதும் பார்க்கிங் வசதியுடன், மூன்று அடுக்கு கட்டடமாக கட்டப்பட உள்ளது.
அலுவலக அறைகள், மேயர், துணை மேயர், கமிஷனர், பொறியாளர் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், கூட்டரங்கு, கழிப்பறை, லிப்ட் போன்ற வசதிகளும் செய்யப்பட உள்ளது.