/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரத்துார் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
/
ஒரத்துார் சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
ADDED : செப் 17, 2024 11:55 PM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் படப்பையில் இருந்து, ஒரத்துார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியே, நீலமங்கலம், குத்தனுார், ஏரிவாக்கம், காவனுார், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகமான உள்ள இந்த பிரதான சாலையில் ஏற்பட்ட மண் அரிப்பினால், சாலையோரங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் விபத்தில் சிக்கி சூழல் உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, மண் அரிப்பினால் ஏற்பட்ட பள்ளத்தில், மண்ணை கொட்டி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.