/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாட்டிறைச்சி கடையை அகற்ற திருப்பருத்திகுன்றம் ஊராட்சி தலைவர் மனு
/
மாட்டிறைச்சி கடையை அகற்ற திருப்பருத்திகுன்றம் ஊராட்சி தலைவர் மனு
மாட்டிறைச்சி கடையை அகற்ற திருப்பருத்திகுன்றம் ஊராட்சி தலைவர் மனு
மாட்டிறைச்சி கடையை அகற்ற திருப்பருத்திகுன்றம் ஊராட்சி தலைவர் மனு
ADDED : ஆக 06, 2024 12:08 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 598 பேர், வேலைவாய்ப்பு, பட்டா, ரேஷன் அட்டை, உதவித்தொகை என பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். தொடர்ந்து, நல வாரிய உறுப்பினர்களுக்கு நிதியுதவி, மூக்கு கண்ணாடி, கல்வி நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி என, 24 பயனாளிகளுக்கு, 1.47 லட்ச ரூபாய் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
* காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு பகுதியில் உள்ள அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான இடத்தில், ஆறு தலைமுறைகளாக குடும்பத்துடன், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஏழை, தினக்கூலியாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, வீட்டு மனையோ இல்லை. வசிப்பதற்கு எங்களுக்கு வீடு மனை பட்டா வழங்க வேண்டும்.
* திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ள பாண்டியன் தியேட்டர் அருகே, நான்குவழிப் பாதையில், பேருந்து நிறுத்தம் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வரப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் செல்லும் சாலைக்கு அருகே, மாடு வெட்டுவதால், இறைச்சி துர்நாற்றம் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
கழிவுகளை உண்ண வரும் நாய்களால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடு அப்பகுதியில் ஏற்படுவதால், இறைச்சி கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.