/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரி முதல்வருக்கு மனு
/
ஓய்வூதியம் உயர்த்தி வழங்க கோரி முதல்வருக்கு மனு
ADDED : பிப் 27, 2025 08:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சிப்பந்திகள் முன்னேற்ற சங்க பொது செயலர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சிப்பந்திகள் முன்னேற்ற சங்கம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானத்தின்படி, ஓய்வுபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 5,500 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தங்களுக்கு கடந்த ஆண்டு அக்., 18 ம் தேதி அனுப்பப்பட்டது.
தங்களுடைய அலுவலகத்தில் இருந்து தக்க நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளருக்கு அனுப்பி நீண்ட நாட்களாகியும், கோரிக்கை மனு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக, 5,500 ரூபாயில் இருஸ்நது, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.