/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரங்களில் மண் கொட்டி சமன்படுத்தாததால் பள்ளம்
/
சாலையோரங்களில் மண் கொட்டி சமன்படுத்தாததால் பள்ளம்
ADDED : ஜூலை 02, 2024 02:33 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில் இருந்து காப்புக்காடு வழியாக மருதம் செல்லும்3 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.
படூர், காட்டாங்குளம், அமராவதிபட்டணம், ஆனம்பாக்கம், மலையாங்குளம் உள்ளிட்டகிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி திருப்புலிவனம் வழியாக உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலை, சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து இருந்ததை அடுத்து அச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் பகுதியினர்வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, நிரந்தர மழை வெள்ள சேத தடுப்பு நிதியின் கீழ், 2.56 லட்சம் ரூபாய் செலவில், சில மாதங்களுக்கு முன்இச்சாலை சீரமைப்புபணி மேற்கொள்ளப்பட்டது.
சீரமைப்பு பணி செய்த இந்த சாலையின் இருபுறங்களிலும், மண் கொட்டி சமன்படுத்தாததால் சாலை யோரம் பள்ளமாக உள்ளது.
இதனால், பேருந்து, லாரி, வேன் போன்றவாகனங்கள் எதிரேவந்தால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இச்சாலையோரத்தின் இருபுறங்களிலும் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.