/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாணலால் கூரம் ஏரி நிரம்புவதில் சிக்கல்
/
நாணலால் கூரம் ஏரி நிரம்புவதில் சிக்கல்
ADDED : ஆக 24, 2024 12:31 AM

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்த வரிசையில், கூரம் ஏரியும் ஒன்றாகும்.
வடகிழக்கு பருவ மழை காலங்களில், கம்பன் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது, கூரம் ஏரி நிரம்பினால், 500 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும்.
தற்போது, கம்பன் கால்வாய் தடுப்பணை மற்றும் ஏரி மதகுக்கு செல்லும் பாதையில், நாணல் புதர் மண்டிக்கிடப்பதால், ஏரிக்கு செல்லும் மதகு வழியாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத் துறையினர், கம்பன் கால்வாய் மற்றும் மதகு அருகே இடையூறாக இருக்கும் நாணல் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

