/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியாம்பூண்டி சுகாதார நிலையம் முறையாக செயல்படுத்த கோரிக்கை
/
களியாம்பூண்டி சுகாதார நிலையம் முறையாக செயல்படுத்த கோரிக்கை
களியாம்பூண்டி சுகாதார நிலையம் முறையாக செயல்படுத்த கோரிக்கை
களியாம்பூண்டி சுகாதார நிலையம் முறையாக செயல்படுத்த கோரிக்கை
ADDED : மே 02, 2024 01:05 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்தோர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில், இரவு நேர மருத்துவர் பணியிடம் இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்து நேரத்தில் சிகிச்சை அளிக்க இயலாமல், காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும்படி அலைக்கழிக்கும் நிலை உள்ளது.
மேலும், மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு இல்லாத நிலை உள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, களியாம்பூண்டி பகுதியினர் கூறியதாவது:
களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், இந்த சுகாதார நிலையத்திற்கான மருத்துவர் சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வரும் நிலை உள்ளது.
இதனால், நோயாளிகள் காத்து கிடப்பதும், சில நேரங்களில் செவிலியர் சிகிச்சை அளிக்கும் நிலையும் உள்ளது.
எனவே, களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

