/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்
/
காய்ந்த மரங்களால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 26, 2024 10:58 PM

கொட்டவாக்கம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழி சாலை இருந்தது. இச்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்ததால், இருவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த புதிய தார் சாலை ஓரம் மூலப்பட்டு, அரங்கநாதபுரம், கொட்டவாக்கம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய பகுதிகளில், 50 ஆண்டுகளுக்கு மேலான புளிய மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
குறிப்பாக, கொட்டவாக்கம் தனியார் மருந்து தொழிற்சாலை அருகே நான்கு மரங்கள் ஒரே இடத்தில் காய்ந்துள்ளன. கோடையில், பலமாக காற்று அடித்தால், மரக்கிளைகள் உடைந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரம் காய்ந்து இருக்கும் மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

