/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொது இடத்தில் கொடி கம்பம் குன்றத்துாரில் மோதல் அபாயம்
/
பொது இடத்தில் கொடி கம்பம் குன்றத்துாரில் மோதல் அபாயம்
பொது இடத்தில் கொடி கம்பம் குன்றத்துாரில் மோதல் அபாயம்
பொது இடத்தில் கொடி கம்பம் குன்றத்துாரில் மோதல் அபாயம்
ADDED : ஆக 21, 2024 09:19 AM

குன்றத்துார் : அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்படும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குன்றத்துார் தாலுகாவில் பல இடங்களில் அனுமதி பெறாமல் பல்வேறு கட்சியினர் கொடி கம்பம் அமைத்து வருகின்றனர்.
குன்றத்துார் அருகேகொல்லச்சேரியில் வைக்கப்பட்ட பா.ம.க., கொடி கம்பத்தை, கடந்த மாதம் மர்ம நபர்கள் அறுத்து எடுத்து சென்றனர்.இதனால், பதற்றம்ஏற்பட்டது.
கட்சியினர் பொது இடத்தில் வைக்கும் கொடி கம்பத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், கொடி கம்பத்தை மாற்று கட்சியினர் சேதப்படுத்தினால் கலவரம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சியினரின் கொடி கம்பங்களையும் அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.