/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிவன் கோவில்களில் நாளை சனி பிரதோஷம்
/
சிவன் கோவில்களில் நாளை சனி பிரதோஷம்
ADDED : ஆக 29, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நாளை சனி மஹா பிரதோஷம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, அன்றைய தினம், மாலை 4:30 மணிக்கு நந்திக்கு, 21 விதமான அபிஷேகப் பொருட்களால், மஹா அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெற உள்ளது.
இதேபோல, படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர், கோவிந்தவாடி கைலாசநாதர், விஷகண்டிகுப்பம் சக்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் மஹா சனி பிரதோஷம் நடைபெற உள்ளது.

