/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு உபகரணங்கள் பாழ் திருப்பருத்திக்குன்றத்தில் அவலம்
/
விளையாட்டு உபகரணங்கள் பாழ் திருப்பருத்திக்குன்றத்தில் அவலம்
விளையாட்டு உபகரணங்கள் பாழ் திருப்பருத்திக்குன்றத்தில் அவலம்
விளையாட்டு உபகரணங்கள் பாழ் திருப்பருத்திக்குன்றத்தில் அவலம்
ADDED : ஏப் 28, 2024 01:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி அலுவலகம் அருகில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிராமத்தில் உள்ள சிறுவர்- - சிறுமியர் விளையாடி மகிழும் வகையில், ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
இக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் காலை - மாலை மற்றும் விடுமுறை நாட்களில், இங்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர். இதையடுத்து, முறையான பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது.
இதனால், விளையாட்டு உபகரணம் அமைந்துள்ள இடத்தில், அப்பகுதியினர் காய்கறி செடிகள் வளர்த்து வருகின்றனர். சிறுவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
எனவே, கிராம சிறுவர்களின் நலன் கருதி, விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.