/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் காஞ்சி மக்கள்
/
சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் காஞ்சி மக்கள்
சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் காஞ்சி மக்கள்
சாலையோரம் பாழடைந்த கிணறு விபத்தில் சிக்கும் காஞ்சி மக்கள்
ADDED : ஜூலை 31, 2024 02:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளம், கிருஷ்ணசாமி நகர் பிரதான சாலையோரம், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது.
தற்போது பயன்பாடின்றி, குப்பை கொட்டும் இடமாக மாறி, கிணறு பாழடைந்த நிலையில் உள்ளது.
சாலையோரத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் ஒதுங்கும் போது, நிலைதடுமாறி கிணற்றில் விழுந்து விடுகின்றனர்.
சிறுவர்கள், விளையாட்டாக கிணற்றை எட்டிப் பார்க்கும்போது, கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.
அதேபோல, இவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளும், அடிக்கடி கிணற்றில் விழுந்து விடுகின்றன. எனவே, திருவீதிபள்ளத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பயன்பாடின்றியும் உள்ள பாழடைந்த கிணற்றை மூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.