/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்தணஞ்சேரியில் ஆக்கிரமிப்பு இடத்தை சுத்தப்படுத்தி குளம் அமைக்கும் பணி தீவிரம்

ADDED : ஆக 04, 2024 01:45 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி கிராமத்தில், பாலாற்றங்கரையொட்டி பச்சையம்மன் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.
இதில், 2 ஏக்கர் நிலப்பரப்பை அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 2.5 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சாத்தணஞ்சேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பு இடத்தில் பொதுக்குளம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு அந்நிலத்தை தன் அனுபவத்தில் வைத்துள்ள தனிநபர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாத்தணஞ்சேரி ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கொண்டு, நேற்று, ஆக்கிரமிப்பு இடத்தில் செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் துவங்கப்பட்டன.
அதை தொடர்ந்து, பொதுக்குளம் ஏற்படுத்துவதற்கான பணிகள் துவக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.