/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா
/
திருமுக்கூடல் அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 15, 2025 12:41 AM

திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது.
இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
அப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடந்தது.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர், திருமுக்கூடல் சுற்று வட்டார கிராம பகுதிகளில் குறைந்து வரும் விவசாயம் மற்றும் அழிந்து வரும் பசுமை குறித்தும், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நாடக வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கும்மியடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவியர், சினிமா பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்க்கு பள்ளி சார்பில் பரிசு மற்றும் சான்று வழங்கி பராராட்டினர்.