/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பசுவை திருடி கொன்ற மூன்று பேர் கைது
/
பசுவை திருடி கொன்ற மூன்று பேர் கைது
ADDED : மே 07, 2024 09:28 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த இள்ளலுார் ஊராட்சி, பெரியார் நகரை சேர்ந்தவர் துளசி, 50. இவர், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 5ம் தேதி காலை, துளசி வீட்டில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை காணவில்லை. பல இடங்களில் தேடியபோது, வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல், தோல் ஆகியவை மட்டும் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நள்ளிரவில் மாடு திருடியவர்கள், அதை கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை அங்கேயே விட்டு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, துளசி திருப்போரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரணை செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர், இறைச்சிக்காக பசு மாட்டை திருடிக் கொன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, குகநாதன், 38, தயா, 20, தட்சிணாமூர்த்தி, 43, ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

