/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : மார் 28, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், 2023ல், 'பசுமைக்கு திரும்புவோம், பசுமையோடு வளர்வோம்' என்ற இயக்கம் துவக்கப்பட்டது.
இந்த இயக்கம் சார்பில், கல்லுாரி வளாகம் முழுதும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 250 மரக்கன்றுகள் நடும் விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.
இதில், நீர் மருது, வேம்பு, புங்கன், மரம், பூவரசன் என, 250 மரக்கன்றுகள், வனத் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு,கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டு, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் செடிகளை மேயாமல் பாதுகாப்பு வலை அமைத்தனர்.

