/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வரத்து ஏற்படுத்த வலியுறுத்தல்
/
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வரத்து ஏற்படுத்த வலியுறுத்தல்
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வரத்து ஏற்படுத்த வலியுறுத்தல்
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வரத்து ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 09:52 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த அவளூரில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 105 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும்.
அவளூர் அடுத்த பெரியநத்தம் பாலாற்றில் இருந்து, அவளூர் ஏரிக்கான வரத்து கால்வாய் உள்ளது. கடந்த காலங்களில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இக்கால்வாய் வாயிலாக சென்றடையும் தண்ணீரால் ஏரி விரைவாக நிரம்பியது.
கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், பாலாற்று தண்ணீர் அவளூர் ஏரிக்கு வராததால், விவசாயம் பாதித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அவளூர் விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் பாலாற்றில் மணல் அள்ளியதாலும், மணல் அரிப்பு போன்ற காரணங்களாலும், பெரியநத்தம் பாலாற்று படுகை பள்ளமாக உள்ளது. ஆனால், ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் மேடாக உள்ளது. இதனால், ஏரிக்கு தண்ணீர் சென்றடையாத நிலை இருந்து வருகிறது.
மேலும், அவளூர் ஏரி முழுமையாக நிரம்பாததால், ஏரியின் உபரிநீர் வாயிலாக நிரம்ப வேண்டிய தம்மனுார், நெய்குப்பம் ஆகிய ஏரிகளும் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அவளூர் ஏரிக்கு முக்கிய நீர்வரத்து ஆதாரமாக உள்ள பெரியநத்தம் பாலாற்றில் மணல் மேடு ஏற்படுத்த வேண்டும் அல்லது பாலாற்று கரையோரம் குறிப்பிட்ட துாரம் வரை தடுப்பு சுவர் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பெரியநத்தம் பாலாற்றில் தடுப்பணை அமைத்து, ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.