/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி
/
குடிநீர் வசதி இல்லாமல் வஞ்சுவாஞ்சேரியில் அவதி
ADDED : ஆக 20, 2024 08:42 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரி அமிர்தா கார்டன் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. நாள்தோறும் வீட்டிற்கு தேவையான குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் தண்ணீர், அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

