/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் மோட்டார் பழுதால் வில்லிவலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
/
மின் மோட்டார் பழுதால் வில்லிவலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மின் மோட்டார் பழுதால் வில்லிவலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மின் மோட்டார் பழுதால் வில்லிவலத்தில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : பிப் 14, 2025 07:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் ஊராட்சியில், வில்லிவலம், பெண்டை, கோயம்பாக்கம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இதில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு, பாலாறு படுகை ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பம்ப் செய்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் பாலாறு படுகை ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதால், மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
இதனால், வில்லிவலம் மற்றும் பெண்டை கிராமங்கத்தில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. ஊராட்சி நிர்வாகத்தில் கிராம மக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வில்லிவலம் கிராமத்தினர் கூறியதாவது:
மின் மோட்டார் பழுது ஏற்பட்டால், அடி பம்ப் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். அந்த கைபம்புகளும் ஊராட்சி நிர்வாகம் காட்சிப் பொருளாக வைத்துள்ளது. அதை சீரமைத்து, கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.