/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?
/
காஞ்சியில் கொசு அதிகரிப்பு மாநகராட்சி விழிக்குமா?
ADDED : பிப் 21, 2025 08:44 PM
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழைக்கு பின், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில், காலை பனிப்பொழிவு நிலவி வருகிறது. பருவநிலை மாற்றத்தால், காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்லும் மஞ்சள்நீர் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளான உப்பேரிகுளம், புத்தேரி, பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, ஆனந்தாபேட்டை, ரெட்டிப்பேட்டை, நேதாஜி நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
இப்பகுதியில், மாலை 6:00 மணிக்கு மேல் படையெடுத்து வரும் கொசுக்களால், இரவில் நிம்மதியாக சாப்பிட முடியாமலும், துாங்க முடியாமலும் பகுதிவாசிகள் கொசு கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால், நகர் முழுதும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், நகரவாசிகளுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கொசு ஒழிப்பு நடவடிக்கையாக நகர் முழுதும் கொசு மருந்து புகை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

