/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தஞ்சை போல் காஞ்சியிலும் நடை நிகழ்ச்சி நடக்குமா?
/
தஞ்சை போல் காஞ்சியிலும் நடை நிகழ்ச்சி நடக்குமா?
ADDED : மார் 01, 2025 12:13 AM
காஞ்சிபுரம், தமிழக சுற்றுலா துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கைவினை பொருட்களின் உற்பத்தி பற்றிய பாரம்பரிய நடை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு 100 ரூபாய்க்கும், மற்றவர்களுக்கு 250 ரூபாய் கட்டணத்திலும், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் வீணை உற்பத்தி, தலையாட்டும் பொம்மை உற்பத்தி போன்றவை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்கப்படுகிறது. தஞ்சையில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற இடங்களிலும் பாரம்பரிய நடை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆனால், பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தில், இதுபோன்ற முன்னெடுப்புகள் இல்லை என, நகரவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். கைத்தறியால் நெய்யப்படும் பட்டு சேலை உற்பத்தி, 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில், அய்யங்கார்குளம் நடவாவி கிணறு போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணியரை அழைத்துச் சென்று காண்பிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
வெளியூர் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் இந்த பாரம்பரிய நடை நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்பர். காஞ்சிபுரத்தில் சுற்றுலா செல்ல எந்த இடமும் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சை போல் காஞ்சிபுரத்திலும் பாரம்பரிய நடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.