/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐபோன், பணம் பறிப்பு வாலிபர் மீது பெண் புகார்
/
ஐபோன், பணம் பறிப்பு வாலிபர் மீது பெண் புகார்
ADDED : மார் 03, 2025 12:20 AM
சென்னை, திருமங்கலம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், 24 வயது இளம் பெண் ஒருவர், கோயம்பேடு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அந்நிறுவனத்திற்கு, ஹைதராபாதைச் சேர்ந்த சதீஷ்குமார், 26, என்பவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வருவதுவழக்கம். அவருடன் இளம்பெண் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதால், சதீஷ்குமாருக்கு இளம்பெண் ஐபோனும், 32,000 ரூபாய் வரை பணமும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமார், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில், திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.