/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய வன மகோத்சவத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு
/
தேசிய வன மகோத்சவத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 08, 2025 10:34 PM
காஞ்சிபுரம்:தேசிய வன மகோத்சவத்தில், 1,000 மரக்கன்றுகள் நடவு மற்றும் 2,000 விதை பந்துகள் வினியோகம் செய்யப்பட்டன.
வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில், தேசிய வன மகோத்சவ விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முனைவர் அரிகிருஷ்ணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், 1,000 மரக்கன்றுகளை பொது இடங்களில் நட்டனர். இதையடுத்து, 2,000 விதைப்பந்துகளை தேசிய வன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு வழங்கப்பட்டன.