/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாற்று அணைக்கட்டில் 10,000 கனஅடி வெளியேற்றம்
/
செய்யாற்று அணைக்கட்டில் 10,000 கனஅடி வெளியேற்றம்
ADDED : டிச 05, 2024 02:17 AM

உத்திரமேரூர், உத்திரமேரூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு உள்ளது.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த அணைக்கட்டில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் வாயிலாக தண்ணீர்சென்றடைகிறது. இதனால், அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு, உத்திரமேரூர் ஏரி நிரம்ப முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் பெய்தகனமழையால், செய்யாற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து, தற்போது வரை இருகரை தண்ணீர் புரண்டோடுகிறது.இதனால், அனுமந் தண்டலம் செய்யாற்று அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு 150 கன அடி வீதம் உத்திரமேரூர் ஏரிக்குதண்ணீர் செல்கிறது.
மேலும், இந்த அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் செய்யாற்றில் தொடர்ந்து தண்ணீர்வெளியேறுகிறது.