தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நடைபயிற்சியில் 105 பேருக்கு பரிசோதனை

 நடைபயிற்சியில் 105 பேருக்கு பரிசோதனை

 நடைபயிற்சியில் 105 பேருக்கு பரிசோதனை


ADDED : ஆக 03, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 03:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், 'நடப்போம்; நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், 8 கி.மீ., நடைபயிற்சியில் பங்கேற்ற 105 பேருக்கு, நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆகஸ்ட் மாதத்திற்கான நடைபயிற்சி இயக்க நிகழ்ச்சி, காஞ்சி புரம் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில், நேற்று நடந்தது.

இதில், திருப்புட்குழி சுகாதார நிலைய அலுவலர் ஜெயராஜ், காஞ்சிபுரம் நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க தலைவர் சிவகுமார் சுந்தரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை அதிகாரிகள், மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 105 பேர் பங்கேற்றனர்.

நடைபயிற்சியில் ஈடுபட்டோருக்கு காஞ்சிபுரம் வட்டார மருத்துவ பணியாளர்கள் குழுவினர், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us