/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
/
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையோரம் 16ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு
ADDED : நவ 06, 2025 11:25 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோரம், அரசு அருங்காட்சியக காப்பாட் சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் 16ம் நுாற்றாண்டு, விஜய நகரப் பேரரசு கால சதிகல் சிற்பத்தை நேற்று கண்டெடுத்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:
காஞ்சிபுரம் நசரத்பேட்டை வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில் நேற்று களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேகவதி ஆற்றங்கரையோரம் சதிகல் சிற்பம் ஒன்றை கண்டெடுத்தோம்.
இச்சிற்பமானது நடுகற்கள் வகையைச் சார்ந் தது. இந்த சதிகல் சிற்பம் 25 செ.மீ., அகலம், 38 செ.மீ., உயரம் கொண்டது.
தெற்கு திசை நோக்கி காணப்படும் இச்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் உள்ளன.
இதில் உள்ள இரண்டு உருவங்களும் வணங்கும் நிலையில் கைகளை கூப்பியவாறு நின்ற நிலையில் காணப்படுகின்றன.
பட்டாடை உடுத்திய நிலையில் கை, தோள் மற்றும் மார்பு பகுதிகளில் அணிகலன்கள் காணப் படுகின்றன.
இச்சிற்பத்தில் மற்ற சதிக்கற்களில் காணப்படாத ஒரு சிறப்பம்சமாக இருவரின் காதுகளிலும் மிகப்பெரிய அளவிலான அணிகலன் காணப்படுகின்றன.
சிற்பங்களின் முகங்கள் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆண் மற்றும் பெண் சிற்பங்களின் தலையில் கொண்டை அமைப்பு காணப்படுகிறது.
இது இனக்குழு தலைவருக்கான சதிகல் நடுகலாக இருக்கலாம். இச்சிற்பம் கி.பி.16ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

