/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 20 முதல்வர் மருந்தகம் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
/
காஞ்சியில் 20 முதல்வர் மருந்தகம் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
காஞ்சியில் 20 முதல்வர் மருந்தகம் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
காஞ்சியில் 20 முதல்வர் மருந்தகம் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
ADDED : பிப் 20, 2025 07:30 PM
காஞ்சிபுரம்:ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என, கடந்தாண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமும், தொழில்முனைவோர் மூலமாகவும் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மருந்தகங்களில், ஜெனிரிக் வகை மருந்துகளும், பிற வகையிலான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜெனிரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் 16 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 4 முதல்வர் மருந்தகங்களும் என, மொத்தம் 20 முதல்வர் மருந்தகங்கள் உட்கட்டமைப்பு வசதிகளுடன், மருந்தக உரிமம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஊராட்சியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கந்தசாமி, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், அனைத்து துறை அதிகாரிகளுடன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப்-கலெக்டர் ஆஷிக்அலி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.